• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது – அமைச்சர் ஜெயக்குமார்

February 7, 2019 தண்டோரா குழு

அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக, அமமுக தவிர எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்புவிடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் வர்தா மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத சிறந்த திட்டங்களையும் கூட அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அமமுகவை லெட்டர் பேட் கட்சியாக தான் பார்க்கிறோம்; ஆர்கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பெற்ற தற்காலிக வெற்றி அமமுகவுடையது சவால் விடுவதற்கெல்லாம் தகுதியற்றது அமமுக. அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க