• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“திருநாவுக்கரசரை சந்தித்ததில் அரசியல் இல்லை – ரஜினி விளக்கம்

February 6, 2019 தண்டோரா குழு

“திருநாவுக்கரசரை சந்தித்ததில் அரசியல் இல்லை” மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அளித்ததாக ரஜினி விளக்களித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார். இதற்கிடையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக கூறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,

திருமாவளவன், திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. திருநாவுக்கரசர் மூலம் தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயம் ஆனது என்பதால் அவருக்கு முதல் பத்திரிக்கை தந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கிறது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க