• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘கொங்கு மாவேள்’ விருது

February 6, 2019 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கோவை பேரூராதினம் சார்பில் கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் சாந்தலிங்கர் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார். அப்போது, கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகாளர் வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

தரமான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதார துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருவதாக கூறிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் சுகாதார துறைக்கு தமிழக அரசு 62 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார். மேலும், மருத்துவ சுற்றுலா தளமாக தமிழகம் விளங்கி வருகிறது எனவும், மக்கள் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற அதிகளவில் வருவதாகவும் அவர் கூறினார். சாந்தலிங்கர் மருத்துவமனையினால் சுற்றுப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பெற்று பயனடைவார்கள் எனவும், ஏழை, எளிய மக்களுக்காக சேவையாற்றுவது போற்றுதலுக்கு உரிய செயலாகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க