• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டோமினோஸ் நிறுவனத்திற்கு 41.42 கோடி ரூபாய் அபராதம் !

February 6, 2019 தண்டோரா குழு

ஜிஎஸ்டி வரி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காததால் Dominos நிறுவனத்திற்கு 41.42 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே விதிப்பு முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை கடந்த ஆண்டு ஜூலை 2017 முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவகங்களுக்கு 18% விதிக்கப்பட்டது, பின்பு அதை 5% ஆக 2017 நவம்பரில் திருத்தியமைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தேசிய லாபமீட்டு ஆணையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இ-மெயில் ஒன்றை அனுபியுள்ளார். அதில் Dominos நிறுவனம் pizzaக்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட 5% சதவீத வரியை வாடிக்கையாளர்களுக்குவிதிக்காமல், முன்பு இருந்த 18% விதித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசிய லாபமீட்டு ஆணையம் விசாரித்த போது நவம்பர் 2017 முதல் மே 2018 வரை Dominos நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு 18% வரியே விதித்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செல்லவேண்டிய ஜிஎஸ்டி பலன்கள் தடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனத்திற்கு புகார் மனு அனுப்பிய வாடிக்கையாளரிடம் கூடுதலாக வசூலித்த 5.65 ரூபாயை 18% வட்டியுடன் Dominos நிறுவனம் திருப்பி தர வேண்டும். மேலும் 50:50 என்ற விகிதத்தில் 41 கோடியே 42 லட்ச ரூபாயை மாநில மற்றும் மத்திய அரசுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Dominos நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 31 மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,128 கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க