• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா பானர்ஜி

February 5, 2019 தண்டோரா குழு

கொல்கத்தாவில் கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றார்.

ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவருடைய இல்லத்திற்கு நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசுக்கு, சிபிஐ அமைப்புக்கு எதிராகவும் நேற்று முன்தினம் இரவு முதல் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் முன் “ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து அவருடைய தர்ணா போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களான பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒத்துழைக்க வேண்டும், அதேசமயம், அவரைக் கடுமையாக நடத்தக்கூடாது, கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அவரது தர்ணாவை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க