• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

February 5, 2019 தண்டோரா குழு

காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் காவலரால் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்ததாக கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக்கொண்ட ராஜேஷ் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும், ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வாடகை வாகனங்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம், கால் டேக்சி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஆயிரம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், 2000 வாகனங்கள் இன்றைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

மேலும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாடகை கார் ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த ஓட்டுனர் ராஜேஷ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழப்புக்கு காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்தாண்டு மட்டும் ராஜேஷ் தவிர முத்து, மணிகண்டன், என இரு வாடகை கார் ஓட்டுனர்கள் காவல்துறையினரின் தவறான நடவடிக்கையின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க