• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் – முரளிதர ராவ்

February 4, 2019 தண்டோரா குழு

மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளி தர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக தேர்தல் களத்தை பாஜகவும் உற்று நோக்கி வருகிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எந்த ஆட்சியும் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் எங்களை போன்ற சாதனை பட்டியல் இல்லை, 5 ஆண்டில் அனைத்து துறையிலும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம். பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் உள்ள கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாற்ற உள்ளார். பிப்.28ல் மத்திய அரசு மூலம் பயனடைந்தவர்கள் , தொண்டர்கள் வீட்டின் முன் விளக்கு ஏற்றும் கமல் ஜோதி நிகழ்ச்சி நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 4100 சட்டமன்ற தொகுதிகளில் இரு சக்கர வாகன பேரணி தொகுதி வாரியாக மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் அப்போது அறிவித்தார்.

மேலும், தமிழகத்தில் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்து விவரங்கள் விரிவாக தெரிவிப்போம் என குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் நடைபெறுவது ஜனநாயகதிற்கு எதிரானது எனக் கூறிய அவர், மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் பா.ஜகவினர் பேரணி நடத்த கூட அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறிய அவர், மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டால் தான் புரியும் என தெரிவித்தார்.வைகோ கடந்த காலங்களில் திமுக குறித்தும் காங்கிரஸ் குறித்து எவ்வாறு விமர்சித்து வந்தார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், நாங்கள் எப்போது விவாதங்களுக்கு தயாராக உள்ளோ எனவும் உரிய ஆரங்களுடன் எங்களுடன் விவாதிக்க தயாரா எனவும் கூறினார்.

மேலும் படிக்க