• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

February 4, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் திமுக சார்பில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ” கோவிலுக்குள் பக்தன் எப்படி ஒரு பரவசத்தோடு வருவானோ அதேபோல் இந்த தணக்கன்குளம் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். மகாத்மா காந்தி அவர்கள் ‘கிராமம் தான் கோவில்’ என்று சொல்வார். அப்படிப்பட்ட கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன். பின்னர் மக்களிடம் குறைகளைக் கேட்டரிந்த ஸ்டாலின், ஊராட்சி சபை என்பது ஒரு அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடியது. கிராமங்களில் இருந்து தான் அரசியல் பிறந்திருக்கிறது என்பதை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பார்க்க முடிகின்றது. ஆகவே நீங்கள் இல்லாமல் அரசியலே கிடையாது, நீங்கள் இல்லாமல் உள்ளாட்சி பிரதிநிதிகளே கிடையாது. நீங்கள் இல்லாமல் எம்.எல்.ஏ., எம்.பி., க்களே கிடையாது.

இன்றைக்கு உங்களுக்கு பல பிரச்னைகள் இருக்கிறது. சொந்தப் பிரச்னைகளை விட பொதுப் பிரச்னைகள் தான் அதிகம். அதனை இங்கு சொல்ல வந்திருக்கின்றீர்கள். பொதுப் பிரச்சினைகள் என்னவென்றால், குடிதண்ணீர் பிரச்னை – சாலை வசதி – மருத்துவமனை பிரச்னை – சுகாதாரப் பிரச்னை, பள்ளிக் கட்டிடம் வேண்டும் போன்ற பல பிரச்னைகள் இருக்கிறது.

இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் எந்தத் திட்டங்களும் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல், யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்? மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் அது எல்லாம் எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி . நீங்களே சிரிக்கிறீர்கள். இருவரையும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். காரணம் அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் .

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க