• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வனவிலங்கு வேடமணிந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 4, 2019

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி சிறுத்தை,புலி,கரடி வனவிலங்கு வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்,

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வரும் விளை நிலங்களில் யானைகள், மயில் ,பன்றி, செந்நாய், குரங்கு சிறுத்தை போன்றவைகளால் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் தோட்டங்களில் வளர்க்கபடும் ஆடு,மாடு,கோழி போன்றவற்றை கொன்று விடுவதாக புகார் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் அதனை பிடிக்க வனத்துறை 15 நாட்களுக்கு முன்பு கூண்டு வைக்கபட்டு இதுவரை அது பிடிபடவில்லை என தெரிவித்தவர் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படுகிறது.

விவசாயிகள் அச்சத்துடனேயே அங்கு விவசாயம் செய்து வருவதாக கூறியவர் சிறுத்தை நடமாட்டத்தை வன நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அது விளை நிலங்களில் வருவதை தடுக்க சிறப்பு படை நியமனம் செய்து விளை நிலங்களில் வனவிலங்குகள் வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வனவிலங்கு வேடமணிந்து வந்து மனு அளிக்க வந்தவர்களை அங்கிருந்தவர்கள் ஆச்சிரியமாக பார்த்தனர்.

மேலும் படிக்க