• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் !

February 2, 2019 தண்டோரா குழு

சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லாவை நியமித்து பிரதமர் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது.

மேலும், அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு உருவாக்கபட்டது. அக்குழு சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைத்து புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவித்தது.

இந்நிலையில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்து பிரதமர் தலைமையிலான குழு அறிவித்துள்ளது. இவர் மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பிலிருந்து நாகேஷ்வர் ராவ் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க