• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணி இடை நீக்கம்

February 2, 2019

ஆவணப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை ஷங்கரின் மனைவி கவுசல்யா. அதன் பின் ஆவண கொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சங்கர் பெயரில் சமூகநீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். பெரியாரிய கருத்துக்களை பரப்பினார். பறை இசை கற்றுக்கொண்டார்.இதனிடையே, , கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் கிளர்க் பணி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், சமீபத்தில் கோவையில் பறை இசை கலைஞரான சக்தி என்பவரை ககவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். சக்தி தொடர்பான சர்ச்சைகளால் சில தரப்பிலிருந்து இந்த திருமணம் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தெரிகிறது.. இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க