• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 1 முதல் பெண்கள், குழந்தைகள் விடுதிகள் உரிமமின்றி இயக்க தடை

January 31, 2019 தண்டோரா குழு

மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்ட விதிகளுக்கு மாறாக அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முறைகேடான சான்றிதழ்கள் மூலம் விடுதிகள் நடத்த அனுமதி பெறப்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த மதுரை கிளை நீதிபதிகள், சட்ட விதிகளின் படி முறையாக மனுக்களை பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து அதிகாரிகள் பிப்ரவரி 15க்குள்ளும், உரிமம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பிப்ரவரி 28-க்குள்ளும் முடிவெடுக்க உத்தரவிட்டனர்.

மேலும் மார்ச் 1 முதல் உரிமம் இன்றி விடுதிகள் இயங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்க