• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – முருகன்

January 31, 2019

மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் எச்சரித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.சி. எஸ்.டி வகுப்பினருக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும்,ஏழை எளிய மக்கள் சென்னைக்கு வர முடியாததால் மாவட்ட தலைநகரங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த அவர் சிங்காநல்லூரில் சாக்கடை குழியை சுத்தம் செய்ய முயன்ற போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 120 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.டி.எஸ்.சி ஆணையம் பல வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி உரிய இழப்பீட்டை பெற்றுத்தந்துள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். பாரதியார் பல்கலைகழக விவகாரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க