• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் ஐ போன்கள் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு

January 30, 2019 தண்டோரா குழு

இந்தியாவில் போதிய விற்பனை இல்லாமல் வருவாயில் வீழ்ச்சி கண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு வழியாக ஐபோன்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் ஐ போன் விற்பனை கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இருந்ததை விட 15 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு ஐ ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், பண மதிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகள், குறிப்பிட்ட சில தயாரிப்புகளை வினியோகிப்பதில் ஏற்பட்ட பின்னடைவு, உள்ளிட்டவையே காரணம் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தனது விநியோகஸ்தர்களுக்கு அளிக்கும் ஐபோன்களின் விலையைக் குறைத்துள்ளது. அந்நாட்டில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஐபோன் விலையைப் பார்த்துவிட்டு அதனை வாங்குவதைத் தவிர்க்கின்றனர். ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஐபோன்களின் விற்பனை மந்தம் அடைந்துள்ளது பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். வாடிக்கையாளர்கள் இப்போது முன்பைவிட அதிக நாட்களுக்கு பழைய போனையே வைத்துக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐபோன்களுக்கு விற்பனை பெரிய சந்தை உள்ளது. விற்பனை தொடர்ந்து அதிகமாகவும் வாயப்பு உள்ளது என்பதால் ஐபோன்கள் இந்தியாவில் விலை குறைய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க