January 30, 2019
தண்டோரா குழு
சென்னையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்நிறுவன நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பttuட்டு வரும் எல்காட் செஸ் (ELCOT SEZ) என்ற ஐ.டி நிறுவனத்திற்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் ” நாங்கள் உங்களது நிறுவனத்தை கண்காணித்து கொண்டிருக்கிறோம். இன்னும் 7 மணி நேரத்தில் நாங்கள் வைத்த குண்டு வெடிக்கும். நாங்கள் நிறைய நிறுவனங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளோம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஐ.எஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.