• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் நீதிபதியாக சுமன் குமாரி பதவியேற்பு !

January 29, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானில் சிவில் நீதிமன்ற நீதிபதியாக, சுமன் குமாரி என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், குவாம்பர் ஷாதாத்கோட் ((Qambar shahdadkot)) மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி. ஐதராபாத்தில் எல்எல்பி படிப்பை முடித்த அவர், கராச்சியின் ஜாபிஸ்ட் பல்கலையில், சட்டப்படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றார். இவர் அதே மாவட்டத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தானில் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க சுமன் குமாரி விரும்பினார். சவாலான துறையை அவர் தேர்வு செய்துள்ளார். நேர்மையாகவும், கடினமாகவும் பணியை திறம்பட செய்வார் அவரது தந்தை நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சுமன் குமாரியின் மூத்த சகோதரி மென்பொருள் பொறியாளராகவும், மற்றொரு சகோதரி ஆடிட்டராகவும் பணிபுரிகின்றனர்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராணா பகவன்தாஸ் தான் அந்நாட்டின் முதல் இந்து நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க