• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

January 29, 2019 தண்டோரா குழு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் என்று 8வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊர்வலமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.

பின்னர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். பணிஇடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் போராட்டத்தை ஒடுக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க