• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் – தேர்வுத்துறை இயக்குனர்

January 28, 2019 தண்டோரா குழு

திட்டமிட்டபடி பிப்ரவரி 1ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் போராட்டத்தால் தேர்வுப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது தேர்வுத்துறை இயக்குநர்
வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்து வருக்கிறது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.

மேலும் பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏலரமனோர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 90 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் அளித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 80 சதவிகிதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

இதனையேடுத்து தேர்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை முதல் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வுத்துறை பணியாளர்களின் போராட்டத்தால் தேர்வுப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.

மேலும் படிக்க