• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை

January 28, 2019 தண்டோரா குழு

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என போராட்டத்தில் ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்து வருக்கிறது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அரசு தற்போது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஆசியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது. அதைப்போல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு கல்லி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் படிக்க