• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு கொடி காட்டும் – வைகோ

January 26, 2019 தண்டோரா குழு

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு காட்டும் போராட்டம் நடத்தப்படுமென, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

கோவை காந்திபரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு கொடி காட்டும் என தெரிவித்தார். எய்ம்ஸ் அமைப்பதை மதிமுக எதிர்க்கவில்லை எனவும், ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை கண்டித்து கருப்பு கொடி காட்டும் எனவும் அவர் கூறினார். மேலும் நஞ்சு வைத்த உணவில் தேன் வைப்பது போல மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கிறது. முல்லைபெரியாறு, மேகதாது அணை, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவற்றிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது எனவும், இந்த திட்டங்களினால் பொருளாதாரம் உயரும் என்றாலும், தமிழகம் அழிந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை எனவும், தனது வாதத்தினால் தான் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் திறக்க அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க