நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாட்டின் 70 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவை சரவணம்பட்டியில் உள்ள விமல் ஜோதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மைம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மைம் நிகழ்ச்சி மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சிறு நாடகமாக மாணவர்கள் நடத்தினர். இந்நாடகம் பார்ப்போரை பரவசப்படுத்தியது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்