• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

January 25, 2019 தண்டோரா குழு

அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என, கர்நாடக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மோகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும். காவிரி தொடர்புடைய மாநிலங்கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ‘மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, மேகதாது
அணை திட்டத்தை செயல்படுத்தினால் லட்சக்கணக்கான காவிரி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவர், மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்புங்கள், காவிரி தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி அணை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது’ என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க