• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கென பிரத்யேக கண்காட்சி

January 25, 2019 தண்டோரா குழு

70 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக கண்காட்சி நடைபெற்றது. கோவையின் பெற்றோர்கள், மற்றும் வானவில் மேலே அமைப்பு சார்பாக இக்கண்காட்சியை ஐ ரீட் மொழி பள்ளியின் நிறுவனர் பிஜித்ரா ஜெகதீஷ்குமார் துவக்கி வைத்தனர்.

இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் குழந்தைகளுக்கென ஓவிய போட்டிகள்,தியான போட்டிகள் மற்றும் ரோபோட்டிக்ஸ் முறை குறித்த விளக்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்கப்பட வேண்டியவை எனும் தலைப்பில் பெண்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் , குர்திஸ் , சேலைகள் , பேஷன் வகைகள் , உள் அலங்கார பொருட்கள் , கல்விக்கான பொம்மை கள் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க