• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த பின்பும் 3 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 19 மாத குழந்தை !

January 24, 2019 தண்டோரா குழு

மெக்சிக்கோவில் உள்ள மான்டர்ரே என்ற நகரத்தை சேர்ந்த 1 வயது 7 மாதங்களே ஆன பெண் குழந்தை அலோன்ட்ரா டோரஸ் அரியஸ். இக்குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க குழந்தையின் பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த குழந்தையின் கிட்னி, கல்லீரல் மற்றும் இதயம் ஆகியன மூன்று வெவ்வேறு குழந்தைகளுக்கு மாற்றப்பட்டது.

மெக்சிக்கோ முழுவதும் இந்த குழந்தை பற்றிய அதிகமாக பேசப்படும் வருகிறது. பலரும் அவர்களது சமூகவலைதளத்தில் இந்த குழந்தை குறித்து அனுதாபங்களையும் அவர்களின் பெற்றோருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த குழந்தையின் தாய் ஜென்னி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது,

“எங்களது குழந்தை எங்களை விட்டு பிரிந்து விட போகிறார் என்று தெரிந்ததும் அவர் ஏதோ ஒருவகையில் இந்த உலகில் வாழ வேண்டும் என நாங்கள் நினைத்தோம். இப்பொழுது எங்கள் குழந்தை மூன்று குழந்தையாக உயிர் வாழ்கிறாள் ” என்றார். எங்களது குழந்தை எங்களை விட்டு பிரியும் போது மருத்துவமனையையே அமைதி சூழ்ந்திருந்தது. அவளது பிரிவு எங்களை மிகவும் கவலையிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, இருந்தாலும் அவள் இறந்தும் 3 குழந்தைகளை வாழ வைக்கிறாள் என்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க