• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர்கள் போரட்டத்தால் மாணர்வர்கள் தவிப்பு – ஆசிரியராக அவதாரம் எடுத்த கோவை எம்.எல்.ஏ

January 24, 2019 தண்டோரா குழு

ஆசிரியர்கள் போராட்டத்தால் கோவையில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ – ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 82வது வார்டு பேட்டை ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆசிரியர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதையறிந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பள்ளிக்கு சென்று பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு உயிரெழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். மேலும், மாணவர்களை எழுதிக் காட்ட சொல்லியும், வாசிக்க சொல்லவும் வைத்தார்.

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ஆசிரியாக மாறி வகுப்பு எடுத்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க