• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

January 24, 2019 தண்டோரா குழு

அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் பேராசிரியர்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளதாகவும், எனவே உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் , கல்லூரி வாயிலின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் அரசை கண்டித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க