• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜன.27ல் தேசிய அளவிலான இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு

January 24, 2019 தண்டோரா குழு

கோவையில் தேசிய அளவிலான இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு வரும் 27 ம்தேதி துவக்கம். முதன் முறையாக கோவையில் நடைபெற உள்ள இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட எலும்பு சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு நவீன முறைகள் குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு கோவையில் வரும் 27 ம்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரெக்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரெக்ஸ்,

இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்த இந்த மாநாடு முதன் முறையாக கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்,இடுப்பு எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை சார்ந்த மருத்துவத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், இந்த சிகிச்சை தொடர்பான பல்வேறு புதிய வாய்ப்புகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. நாடெங்கிலும் உள்ள இத்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும், உலகளாவிய நிபுணர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ள கருத்தரங்கு, நேரடி ஆபரேஷன் ஒளிபரப்பு ஆகிய வசதிகள் இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்ய உள்ளது. மருத்துவர்கள் எலும்பியல் தொடர்பான சிகிச்சையில் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறியவும்,குறிப்பாக இடுப்பு எலும்புமூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு பேச உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க