• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

January 24, 2019 தண்டோரா குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து,

ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதைப்போல் ஆலையை திறக்க அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகமும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராததற்கு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என

உத்திரவிட்டனர்.இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க