• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர தேசிய கொடி பறக்கவிடபட்டது

January 24, 2019 தண்டோரா குழு

கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 78 ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தென்னக ரயில்வேயில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.

2 சுமார் டன் எடை கொண்ட கொடி கம்பமானது 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ரயில்நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடி 9.5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியக்கொடியை பறக்கவிடும் நிகழ்சசியில் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் படிக்க