• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.10ல் ஆளுநர் மாளிகை – கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அறிவிப்பு

January 23, 2019 தண்டோரா குழு

புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என்றும், பிப்.1௦ ஆம் தேதி இது தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக , கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகும் இதனிடையே டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்பிரேட்டர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அனு பாபு செய்தியாளர்களை சந்தித்த போது,
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை கேபிள் ஒளிப்பரப்பு நிறுத்தப்பட உள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க