• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்த ரஜினி

January 23, 2019 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட படம் மாபெரும் பெற்றது. இதையடுத்து, ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
நடிக்கவுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டன.அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளும் கஜா புயல் பாதிப்பின்போது நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை ரஜினி இன்று நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜினி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சமீபகாலமாக படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்த ரஜினி மீண்டும் அரசியல் பணிகளை துவக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க