• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் 400 பேர் கைது

January 23, 2019 தண்டோரா குழு

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியலில் 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிம் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக இன்று இரண்டாவது நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக 500 க்கும் மேற்பட்டோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் புறநகரில் 95 சதவிகித ஆசிரியர்களும், மாநகரில் 75 சதவிகித ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் அரசு ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாரு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை தடுத்த காவல்துறையினர் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கோவையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக 8 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க