• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு விவகாரத்தில் ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் – மேத்யூஸ் சாமுவேல்

January 23, 2019 தண்டோரா குழு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் உரிய நேரத்தில் ஆதாரங்கள் வெளியிடப்படும் என தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலளிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை வந்துள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்ஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, எதுவும் திட்டத்துடன் சென்னை வந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆம், ஒரு திட்டத்துடன் தான் வந்திருப்பதாக சாமுவேல் பதில் அளித்தார். தொடர்ந்து கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கூறி வருவது குறித்து மாத்யூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சாமுவேல் பதில் அளித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோர இருப்பதாவும் கோடநாடு விவகாரம் தொடர்பாக தன்னிடம் பல்வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் கூறிய அவர் தான் சொல்லிக் கொடுத்து சயன் மனோஜ் பேசவில்லை.கேரளாவில் இருக்கும் சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக்கொள்ளலாம். தன்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என மேத்யூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க