• Download mobile app
01 Nov 2024, FridayEdition - 3187
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்கள் உருவாக்கியுள்ள கலாம் செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ சிவன்

January 22, 2019 தண்டோரா குழு

மாணவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள கலாம் செயற்கைகோள்கள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் சுமார் ரூ.14.35 லட்சம் காசோலையை இஸ்ரோ தலைவர் சிவன், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ சார்பில் மாணவர்களுக்கான இளம்விஞ்ஞானி பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதுவரை ஜலந்தர் மற்றும் அகர்டாலா ஆகிய இரண்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருச்சியில் பயிற்சி கூடம் அமைக்கப்படும். இதில் தமிழக மாணவர்கள் மட்டுமில்லாது, தென்னிந்திய மாணவர்களும் பங்கேற்ப்பர். பயிற்சியில் மாணவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் சோதனை செய்தபின் இஸ்ரோ பெற்றுக்கொள்ளும். வருங்காலங்களில் அவை விண்ணில் செலுத்தப்படும். தற்போது மாணவர்கள் உருவாக்கியுள்ள சிறிய ரக செயற்கைக்கோள்கள் கலாம் என்ற பெயரில் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது” எனக் கூறினார்.

மேலும் படிக்க