• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்கள் அஜித்தை பாஜக-வுக்கு வரவேண்டும் என்றெல்லாம் அழைக்கவில்லையே – தமிழிசை

January 22, 2019 தண்டோரா குழு

பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் சிலர் பாஜக கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை, அஜித்தை போன்று அவரது ரசிகர்களும் நல்லவர்கள் அஜித் ரசிகர்கள்தான் தமிழகத்தில் பாஜகவை பரப்ப வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார். இதையடுத்து, நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை. அரசியல் திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன் என அஜித் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன்,

நாங்கள் அஜித்தை பாஜக-வுக்கு வரவேண்டும் என்றெல்லாம் அழைக்கவில்லையே. மற்ற நடிகர்களைப் போல் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என இழுக்காமல் தெளிவுபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். பலர் சொல்வதுபோல் நடிகர் அஜித்தின் அறிக்கை ஒன்றும் பாஜக-வுக்கு விழுந்த அடியில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க