• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..!

January 21, 2019 தண்டோரா குழு

சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

முத்துக்குமரன் கமிட்டி வழங்கிய அறிவுரையின்படி அரசு பள்ளிகள் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில் 2, 381அரசு பள்ளிகளில் மழலையர்களுக்கான துவக்க ஆரம்ப படிப்புகள் எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ,சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஒபிஎஸ், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது முதல்வர் 7 குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்.

இதற்காக வரும் கல்வி ஆண்டில் ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க