• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்மீது குற்றம் இல்லை என நிரூபிக்க முதல்வர் நெருப்பிலும் இறங்குவர் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

January 21, 2019 தண்டோரா குழு

கொடநாடு விவகாரத்தில் தன்மீது குற்றம் இல்லை என நிரூபிக்க முதல்வர் பழனிசாமி நெருப்பில் கூட இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் தொடந்து கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தன மேலும் இதில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அதைபோல் இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். மேலும், முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். எனினும், இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் குறுக்கு வழியை கையாண்டுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

“கொடநாடு விவகாரத்தில் திமுக பின்புலத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் குற்றம் இல்லை என நிரூபிக்க முதல்வர் பழனிசாமி நெருப்பில் கூட இறங்குவார்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க