• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை

January 21, 2019 தண்டோரா குழு

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ள நிலையில் தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (ஜன.,22) முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தலைமை செலாளர் கிரி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது.ஜனவரி 22 ம் தேதி காலை 10.30 மணிக்குள் ஊழியர்களின் வருகை பதிவு குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும்.

வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை தினமும் வருகை பதிவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்என அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க