• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

January 19, 2019 தண்டோரா குழு

தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம் என கொல்கத்தா மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொல்கத்தாவில் மாநாடு நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அப்போது பேசிய மம்தா பானர்ஜி,

மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். தம்மைத்தவிர மற்றவர்கள் யாருக்கும் நேர்மை இல்லை என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. 5 ஆண்டுகளில் நாட்டையே பாஜக கொள்ளையடித்து விட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை மோடி அரசு அழித்துவிட்டது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க