• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க கோரி தொடர் போராட்டம் அறிவிப்பு

January 19, 2019 தண்டோரா குழு

பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக நான்கு வம்ச பட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

நான்கு வம்ச பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பண்ணாடிகள் உள்ளிட்ட சிலர் தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசாணையாக அறிவிக்ககோரி பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளை சேர்ந்து, பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்ற நடவடிக்கை எடுக்க கோரி, வரும் 19, 20 ஆகிய நாட்களில் கோவை தேவேந்திர வேளாளர் வீதி அருள் மிகு மாரியம்மன் கோவில் மைதானம் ஊர் பொது இடத்தில் சமைத்து சாப்பிட்டு தங்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

உடனடியாக தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பிரபு பட்டக்காரர், கிருஸ்ணன் பட்டக்காரர், ராதாகிருஸ்ண பட்டக்காரர், மாசிலாமணி பட்டக்காரர் மற்றும் ஊர் பண்ணாடிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க