• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவரை எரித்து கொன்ற மனைவி

January 18, 2019 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி சிகிச்சை பெற்று வந்தவர் கணவர் உயிரிழந்தார்.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா-வில் டெடி பூர்ணமா என்ற நபர் கடந்த செவ்வாய் அன்று வீட்டின் மாடியில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்களை சீரமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனைவி இல்ஹம் கயானி கணவரின் ஸ்மார்ட் போனை எடுத்து வந்து அதன் பாஸ்வேர்டை கேட்டுள்ளார் ஆனால் டெடி பூர்ணமா பாஸ்வேர்டை தர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர் பூர்ணமா மனைவி கயானியை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கயானி திடீரென பெட்ரோலை எடுத்து கணவரின் மீது ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்து உயிரோடு கொளுத்தினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அனைத்து பூர்ணமாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க