• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினை ஆட்டை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது

January 17, 2019 தண்டோரா குழு

இளைஞர் ஒருவர் சினை ஆடு ஒன்றை பாலியல் வன்புணர்வு செய்ததால் பரிதாபமாக மரணமடைந்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பர்சா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மகாஜினி தேவி இவர் வீட்டில் 3 மாத சினை ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் மகாஜினி தேவி வளர்த்து வந்த ஆட்டை கடந்த 15ம் தேதி இரவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சினை ஆடு பரிதாபமாக பலியானது.

இதனைக் கண்ட சிறுவர், சிறுமிகள் ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். பின் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகாஜினி தேவியின் புகாரின் பேரில்முகமது சிர்மன் (வயது 27) கைது செய்யப்பட்டார். தினக்கூலியாக பணிபுரிந்து வரும் முகமது சிர்மன் மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இளைஞரிடம் மது எப்படி கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முறையற்ற பாலியல் உறவு, விலங்கை கொலை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முகமது சிர்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறந்த ஆட்டின் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கடந்த ஆண்டு இதே போன்று ஹரியானாவில் சினை ஆடு ஒன்றினை 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க