• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் !

January 14, 2019 தண்டோரா குழு

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தை திருநாளான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ஆங்காங்கே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் , கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து மன்றத்தினர் சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர்.

இவ்விழாவில் பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி விழாவில் வெளிநாட்டை சேர்ந்தவரும் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்தார். ரஜினி தொடர்ந்து ஆன்மீக அரசியல் பேசி நிலையில் கோவையில் அவரது ரசிகர்கள் பல்வேறு மதத்தினரை ஒன்றிணைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடி அனைத்து மதத்தினரும் ஓன்று தான் என்பதை நிரூபித்து உள்ளனர்.

மேலும் படிக்க