• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடநாடு கொலை , கொள்ளை பற்றி விசாரிக்க ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு – ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

January 14, 2019 தண்டோரா குழு

கொடநாடு கொலை, கொள்ளை பற்றி ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அதைபோல் இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். மேலும், முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். எனினும், இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்தார்.
இதற்கிடையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில்,கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை தொடர்பாக முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கொடநாடு கொலை சம்பவத்தில் பழனிசாமி குற்றவாளி என்று சொல்லப்படுகிறது. குற்றம் சுமத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மரணம் விபத்துதான் என எஸ்பியை தெரிவிக்க வைக்க முதல்வர் அழுத்தம் கொடுத்துள்ளார். எஞ்சி இருக்கும் ஆதாரங்களை முதல்வர் அழிக்க முயற்சிக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமியை உடனடியாக பதவி விலக்க வேண்டும். கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பழனிசாமி தமிழகத்திற்கு அவமானம். இதனை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறித்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் உறுதியளித்தாகவும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க