• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலையில் இன்று மகர ஜோதி- பாதுகாப்பு பணியில் 5000 போலீஸ்!

January 14, 2019 தண்டோரா குழு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையில், 2 பெண்கள் சமீபத்தில் அதிகாலையில் சபரிமலை கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.இதையடுத்து, ஒரு மணி நேரம் நடை மூடப்பட்டு பரிகாரப் பூஜைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதித்தை கண்டித்து பெரும் போரட்டங்கள் நடைபெற்றன.இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன,.

இந்நிலையில் சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும். இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள்.

இதனைதொடர்ந்து மகர ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரம் சிறப்பு பஸ்களும் தயார் படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க