• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற ஆஸ்துமா மற்றும் மூச்சு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

January 12, 2019 தண்டோரா குழு

தங்குதடையின்றி சுவாசிப்பதற்கு உதவும் வகையில் “Berokzindagi yatra” ஆஸ்துமா மற்றும் மூச்சு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

அச்சம் மற்றும் களங்கம் இல்லாமல் மூச்சு உள்ளிழுப்பு சிகிச்சை புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழச்செய்வது குறித்து பீரோ சீண்டாகி யாத்திரையின் நோக்கமாகும். ஆஸ்துமா பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா இறப்பு ஆகியவற்றில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் போக்குவரத்து , தொழில்துறையால் ஏற்படும் மாசுபாடுகளால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பை தடுக்கும் வகையில், பிரோ சீண்டாகி யாத்திரை செல்வது அவசியமானது.

கோவை சுவாச மருத்துவ சங்கத்தின் தலைவரான Dr. ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் அவசியம் என்றார். மேலும் தங்களது பணிகளை இடையூரின்றி செய்வதற்கும்,
நோய் குறித்த விழிப்புணர்வால் ஆஸ்துமா நோயாளிகள் பிரச்சனைகள் இன்றி வாழவும், மருத்துவரின் ஆலோசனையின்படி மகிழ்ச்சியாக வாழ இந்த யாத்திரை பயனளிக்கும் என்றார். மேலும் நோயாளிகளுக்கு உள்ள சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க