January 11, 2019
தண்டோரா குழு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,
கோவை மண்டலத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி மற்றும் அதையும் தாண்டி செல்லும் ஊர்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து 10ம் தேதி 200 நடைகளும், ,11ம் தேதி 300 நடைகளும், 12ம் தேதி 300 நடைகளும், 13ம் தேதி 400 நடைகளும், 14ம் தேதி 200 நடைகளும் ஆக மொத்தம் 5 தினங்களும் சுமார் 1400 நடைகள் மதுரை, திருச்சி, தேனி மார்க்கமாக சிறப்பு [பேருந்துகளை இயக்கவும் அதே சமயம் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாகவும் இயக்கப்படவுள்ளது.
அதேபோல் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், சென்னை ஆகிய ஊர்களுக்கு 10ம் தேதி 65 நடைகளும், ,11ம் தேதி 80 நடைகளும், 12ம் தேதி 80 நடைகளும், 13ம் தேதி 65 நடைகளும், 14ம் தேதி 55 நடைகளும் ஆக மொத்தம் 5 தினங்களுக்கு சுமார் 345 நடைகள் சேலம், சென்னை, மார்க்கமாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அதேசமயம் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க அனைத்து பேருந்து நிலையங்ளிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் அதிகாரிகளை நியமித்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.