• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் – அதிமுக!

January 11, 2019 தண்டோரா குழு

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தந்த தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துமாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க