• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜன.22ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் – ஜாக்டோ ஜியோ

January 11, 2019 தண்டோரா குழு

திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.அப்போது, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ திரும்பப் பெற்றது. மேலும் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,வழக்கை ஜன.28க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

மேலும் படிக்க