கோவையில் தமிழர் திருவிழா மூன்று நாட்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கோவையில் பிரம்மாண்டமான தமிழர் திருவிழா கொடிசியா வளாகத்தில் மூன்று நாட்கள் நடைப்பெறவுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.
இது குறித்து “நயம் அறக்கட்டளையின் ” இணை ஒருங்கினைப்பாளர் அருள்மர்கிரேட்கிளிரா கூறுகையில்,
பண்டையத் தமிழர்களின் வீரத்துக்கும், விவேகத்துக்கும், பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாக மூன்று நாட்கள் சிறப்பு திருவிழாவாக 10த்திற்கும் மேற்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டுகளான சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக் கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லா சுத்துதல் மேலும் 20க்கும் மேற்பட்ட மெய்சிலிர்க்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் மற்றும் கால்நடை கண்காட்சி நடைப்பெறவுள்ளதாகவும். கால்நடை சந்தை, நாட்டு மாடு, நாட்டுநாய், குதிரை, காளைகள் சண்டை சேவல் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் 50 திற்கும் மேற்ப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி, ஒவியப்போட்டி, கோலப் போட்டி, சிறப்பு பெண்கள் விளையாட்டு போட்டிகள், பட்டம் விடுதல், பொம்மலாட்டம் என பல வகையான நிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளதாக கூறினார்.
இந்த சந்திப்பில் போது நயம் அறக்கட்டளையின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கங்காதேவராஜ், விஜயலட்சும் என பலர் கலந்து கொண்டனர். தமிழர் திருவிழா கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 15ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு
கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு